சரமாரியாக பணிநீக்கம் செய்கிறது இன்போசிஸ்!

  shriram   | Last Modified : 10 May, 2017 05:25 pm
கடந்த வாரம் தான், அமெரிக்கர்களுக்கு 10,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளதாக இன்போசிஸ் நிறுவனம் கூறியது. தற்போது அந்நிறுவனத்தின் இந்திய அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் பலரை அதிரடியாக பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து சரியாக வேலை செய்யாமல் இருக்கும் சில நபர்களை திறன் மேம்பாட்டுக்காக பணி நீக்கம் செய்யலாம், என அந்நிறுவனத்தின் அறிக்கை ஒன்று தெரிவித்தது. எவ்வளவு ஊழியர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என சரியாக தெரியவில்லை. ஆனால், நாடு முழுவதும் உள்ள அந்நிறுவனத்தின் அலுவலகங்களில் நூற்றுக்கணக்கான நடுநிலை ஊழியர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க விசா கட்டுப்பாடுகளை தொடர்ந்து அந்நாட்டில் வேலை வாய்ப்பை உருவாக்க பல ஐ.டி நிறுவனங்கள் முனைந்து வருகின்றன. ஏற்கனவே, சி.டி.எஸ், விப்ரோ, டி.சி.எஸ் போன்ற நிறுவனங்களும் பல ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக கூறியுள்ளன. அமெரிக்காவில் புதிய அலுவலகங்களில் முதலீடு செய்ய இங்குள்ள பணியாளர்களை இந்த நிறுவனங்கள் நீக்கி வருவதாக கருதப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close