உங்க ஊர்ல ஜியோ ஃபைபர் இருக்கா??

  shriram   | Last Modified : 10 May, 2017 10:01 pm
ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ சேவைகளை அறிவித்தபோதே ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவை திட்டத்தை பற்றி கூறியது. ஆனால், அதன்பின் அந்த சேவையை பற்றிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், ஃபைபர் சேவைக்கான சோதனை ஓட்டம் நாட்டின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் ட்விட்டரில் எந்தெந்த ஊர்களில் ஜியோ ஃபைபர் சேவைகள் தற்போது வெள்ளோட்டம் பார்க்கப்படுகின்றன என ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு, மும்பை, டெல்லி, ஜாம்நகர், வதோதரா, சூரத் ஆகிய ஊர்களில் தற்போது சோதனை செய்து வருவதாக ஜியோ நிறுவனம் பதிலளித்தது. ஏற்கனவே புனேவில் ஜியோ ஃபைபர் உபயோகிப்பதாக ஒரு வாடிக்கையாளர் கூறியிருந்தார். இதுவரை 750Mbps முதல் 1Gbps வேகம் வரை இணைய சேவையை ஜியோ ஃபைபர் மூலம் பெற முடிகிறது என பல வாடிக்கையாளர்கள் கூறியுள்ளனர். இந்த சேவை முதல் 90 நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படும். ஆனால், அதற்கான ஃபைபர் ரூட்டர் சாதனத்தை பெற சுமார் 4,500 ரூபாய் டெபாசிட் கட்டணம் வழங்க வேண்டி இருக்கும் என கூறப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close