விப்ரோ, இன்போசிஸ் வரிசையில் டெக் மஹிந்திரா

Last Modified : 01 Jan, 1970 05:30 am

டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைகளால் ஆட்டம் கண்டுள்ள பன்னாட்டு தொழில் துறை நிறுவனங்கள் மற்ற நாடுகளில் ஆட்குறைப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக இந்தியாவில் ஐடி நிறுவனங்கள் நூற்றுக்கணக்கில் பணியாளர்களை நீக்கம் செய்து வருகிறது. பணி திறன் மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இவர்கள் நீக்கப்படுவதாக நிறுவனங்கள் கூறினாலும் பின்னணியில் டிரம்ப்பின் உத்தரவு செயல்படுவது தெரிய வந்துள்ளது. சமீபத்தில் முன்னணி ஐடி நிறுவங்களான காக்னிஸண்ட், இன்போசிஸ், விப்ரோ போன்றவை ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. இந்த வரிசையில் தற்போது இந்தியாவில் 5-வது பெரிய ஐடி நிறுவனமான டெக் மஹிந்திராவும் இணைந்துள்ளது. இந்நிறுவனம் தனது பணியாளர்கள் 100 பேரை பணியை விட்டு நீக்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்த நிறுவனம் பணி திறன் மதிப்பீட்டின் அடிப்படையில் தான் ஊழியர்கள் நீக்கப்பட்டதாகவும், ஆட் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடவில்லை எனவும் கூறியுள்ளது. இது போன்ற ஆட்குறைப்பு நடவடிக்கையால் ஐடி துறையில் கால் பதிக்க நினைக்கும் இந்திய இளைஞர்கள் பலரின் கனவுகள் கேள்விக்குறியாகி உள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close