ஸ்னாப்டீல் - ப்ளிப்கார்ட் இணைகிறது!

  shriram   | Last Modified : 11 May, 2017 09:32 pm
சமீப காலத்தில் அமேசான், ப்ளிப்கார்ட் நிறுவனங்களால் நஷ்டத்தில் இறங்கிய ஸ்னாப்டீல், ப்ளிப்கார்டுடன் இணையும் பேச்சுவார்த்தை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஸ்னாப்டீல் நிறுவனத்தின் முதலீட்டாளரான சாப்ட்பேங்க், இந்த ஒப்பந்தத்திற்கு வெகு நாட்களாக காத்திருந்தது. மற்ற பங்குதாரர்களை சம்மதிக்க வைக்கும் முயற்சியின் பலனாக முக்கிய முதலீட்டாளரான நெக்சஸ் நிறுவனம் இதற்கு தற்போது சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முடிவில், நெக்சஸ் நிறுவனத்திற்கு 320 கோடி முதல் 380 கோடி வரை கிடைக்கும் என்றும், ஸ்னாப்டீலின் நிறுவனர்கள் குனல் பால் மற்றும் ரோஹித் பால் இருவருக்கும் தலா 100 கோடி ரூபாய் வரை கிடைக்கும் என கூறப்படுகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close