இந்தியா வந்தது Nokia 3310

Last Modified : 17 May, 2017 12:27 pm
ஆயிரம் வசதிகளுடன் ஆண்ட்ராய்டு போன்கள் வந்தாலும் நோக்கியா நிறுவனத்தின் 'பேசிக் மாடல்' மொபைல்கள் மீதான இந்தியர்களின் காதல் என்றுமே மாறாது. தொழிலில் சிறிது பின்னடைவை சந்தித்த நோக்கியா நிறுவனம் தற்போது மறுஅவதாரம் எடுத்து மீண்டும் ஸ்மார்ட்போன் சந்தைக்குள் நுழைந்துள்ளது. ஸ்மார்ட்போன் உலகிற்குள் நுழைந்து இருந்தாலும் தனது பேசிக் மாடல் போன்களை நோக்கியா கைவிட்டு விடவில்லை. இந்தியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நோக்கியாவின் பேசிக் மாடல் போனான 'Nokia 3310' இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. Nokia Series 30+ OS இயங்கும் இந்த போன் 2.4 இன்ச் அளவுள்ள காட்சித்திரை கொண்டது. 2 MP திறனுள்ள பின்பக்க கேமரா, 16 MB இன்டெர்னல் ஸ்டோரேஜ், 32 ஜிபி எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், mp3 பிளேயர், எப்.எம் ரேடியோ, ப்ளூடூத் 3.0, 2ஜி இன்டர்நெட் போன்ற அம்சங்கள் இதில் உள்ளன. இதன் 1200mAh திறனுள்ள பேட்டரி 22 மணி நேர டாக் - டைம் மற்றும் 1 மாத கால ஸ்டாண்ட் - பை டைமை கொண்டது. வியாழக்கிழமை முதல் விற்பனைக்கு வரும் இந்த மொபைலின் விலை 3,310 ரூபாயாகும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close