2 லட்சம் ஐ.டி ஊழியர்கள் வேலை இழப்பார்கள்: பகீர் ரிப்போர்ட்

  shriram   | Last Modified : 16 May, 2017 07:56 pm
அமெரிக்காவில் பணிபுரிய இந்தியர்கள் பெறும் விசாவுக்கு அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகள் விதித்ததை அடுத்து அந்நாட்டில் முதலீடு செய்து அமெரிக்கர்களுக்கு வேலை வழங்க பல முக்கிய ஐ.டி நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளது. குறிப்பாக, இன்போசிஸ், காக்னிசன்ட் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளன. இந்நிலையில், இந்த வருட இறுதியில் 56,000 ஐ.டி ஊழியர்கள் வேலை இழப்பார்கள் என கூறப்பட்டது. ஆனால், அது மிகவும் குறைவு, என ஹெட்ஹன்டர்ஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. பல்வேறு நிறுவனங்கள் வேலைக்கு ஆளெடுக்க ஹெட்ஹன்டர்ஸ் உதவுவது குறிப்பிடத்தக்கது. அந்த நிறுவன தலைவர் லக்ஷ்மிகாந்த் இதுபற்றி கூறுகையில், "ஊடகங்களின் கணிப்பு தவறானது. வருடத்திற்கு 1.75 முதல் 2 லட்சம் ஊழியர்கள் என அடுத்த 3 வருடங்களுக்கு ஐ.டி துறை ஊழியர்கள் வேலை இழப்பார்கள்," என கூறினார். சர்வதேச நிறுவனமான மெக்கின்ஸி & கம்பெனி இதுபற்றி, "அடுத்த 3-4 வருடங்களில் ஏற்படும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு, இங்கு இருக்கும் பாதி ஊழியர்களுக்கு தகுதி இருக்காது. அனைவருக்கும் மாற்று பயிற்சி அளிக்கவேண்டும். அதில் பலருக்கு அந்த திறமை இருக்க வாய்ப்பில்லை. எனவே பலர் வேலை இழக்க நேரிடும்," என்றது. இப்படி பணி நீக்கம் செய்வதால், மும்பை, பெங்களூரு போன்ற பெரிய நகரங்கள் அல்லாமல், கோவை போன்ற சிறிய நகரங்கள் தான் அதிகம் பாதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close