போர்ப்ஸ் சர்வதேச சாதனையாளர் அம்பானி!!

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஜியோ, இந்திய தொலைத்தொடர்பு நிறுவனத்தையே திருப்பி போட்டுவிட்டது என்றே சொல்லலாம். இலவச ஆஃபர்கள், குறைந்த விலை பேக்குகள் என அனைத்து நிறுவனங்களும் தற்போது ஜியோவுடன் போட்டி போட்டு வருகின்றனர். பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கையின், உலகம் முழுவதும் தங்களது துறையின் நிலைப்பாட்டையே மாற்றி அமைப்பவர்களை கவுரவிக்கும் டாப் 25 'கேம்சேஞ்சர்ஸ்' பட்டியலில், அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். வேறு எந்த இந்தியரும் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. மேலும், கடந்த டிசம்பர் மாதத்தை விட முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு தற்போது சுமார் 45,000 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில், டாட்டா நிறுவனத்தை முந்தி, மும்பை பங்குச்சந்தையின் அதிக மதிப்புள்ள பங்குகளாக ஜியோ உருவெடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close