1.7 கோடி சோமேட்டோ பயனாளர் தகவல் திருட்டு

Last Modified : 01 Jan, 1970 05:30 am
சோமேட்டோ இணையதளத்தில் இருந்து சுமார் 1.7 கோடி பயனாளர்களின் தகவல்கள் திருட்டு போய் உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் போன்றவற்றை சோமேட்டோ நிறுவனத்தின் சர்வரில் இருந்து இணைய திருடர்கள் திருடியுள்ளனர். பயனாளர்களின் கிரெடிட் கார்டு தகவல் உட்பட வங்கி தகவல்கள் மற்றொரு சர்வரில் இருந்ததால் அவை பாதுகாப்பாக இருப்பதாக சோமேட்டோ கூறியுள்ளது. தகவல்கள் திருட்டு போனதை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பயனாளர் கணக்குகளின் பாஸ்வேர்டை சோமேட்டோ நிறுவனமே மாற்றி உள்ளது. மேலும் சோமேட்டோ ஆப் மற்றும் வெப்சைட்டில் இருந்து அவர்களை லாக்-அவுட் செய்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close