ஜிஎஸ்டி-யை தொடர்ந்து தியேட்டர் பங்குகள் வீழ்ச்சி

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்த முயற்சித்து வரும் ஜிஎஸ்டி, ஒருங்கிணைந்த வரி திட்டத்தில் சினிமா தியேட்டர்கள் மீது 28% வரி சுமத்தப்பட்டுள்ளது. இது சினிமா தொழிலுக்கு பாதகமாக அமையும் என சினிமா பிரபலங்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இன்று மும்பை பங்குச்சந்தையில் இரண்டு பெரிய மல்டிப்ளெக்ஸ் தியேட்டர் நிறுவனங்களான ஐநாக்ஸ் மற்றும் பி.வி.ஆரின் பங்குகள் சரிந்துள்ளன. ஐநாக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 3.47 சதவீதமும், 2.32 சதவீதமும் சரிந்துள்ளது. ஈரோஸ் நிறுவனத்தின் பங்குகள் சுமை 4 சதவீதம் சரிந்துள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close