1,500 பணியாளர்களை நீக்கிய டாட்டா மோட்டார்ஸ்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் உள்ள 1,500 நிர்வாக பணியாளர்களை நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் 2016-17-ஆம் நிதியாண்டு அறிக்கையை அறிவித்த பின்னர் பேசிய நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி, 1,500 நிர்வாக இயக்குனர்களை நீக்கம் செய்திருப்பதாக தெரிவித்தார். பணி மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இவர்கள் நீக்கப்பட்டதாகவும், நீக்கப்பட்டவர்களில் சிலருக்கு விருப்ப ஓய்வும், சிலருக்கு வேறு பணியும் அளிக்கப்பட்டுள்ளதாக டாட்டா மோட்டார்ஸ் தெரிவிதித்துள்ளது. இந்த நடவடிக்கையில், கடைநிலை ஊழியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close