Alcatel -ன் இரண்டு புதிய டாப்லெட்கள்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

Alcatel நிறுவனம் புதிதாக இரண்டு டாப்லெட்களை அறிமுகப்படுத்தி உள்ளது. Alcatel Pixi 4 (7) 4G மற்றும் Alcatel Pixi 4 (7) WiFi எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த டாப்லெட்கள், 7 இன்ச் தொடுதிரை, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளம், குவாட் - கோர் ப்ராசெஸ்ஸார், 1 ஜிபி RAM போன்ற பொதுவான அம்சங்களை கொண்டுள்ளன. இதனை தவிர்த்து Pixi 4 (7) 4G, 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், டூயல் சிம், 4ஜி, வைஃபை, 8 MP பின்பக்க கேமரா, 5 MP முன்பக்க கேமரா மற்றும் 4000mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. Pixi 4 (7) WiFi-ல் 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், வைஃபை, 2 MP பின்பக்க கேமரா, 0.3 MP முன்பக்க கேமரா, 2580mAh பேட்டரி போன்ற அம்சங்கள் உள்ளன. Alcatel Pixi 4 (7) 4G-ன் விலை 6,499 ரூபாயாகவும், Alcatel Pixi 4 (7) WiFi-ன் விலை 3,999 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
[X] Close