LSB தொழில்நுட்பம் கொண்ட Asus ZenFone Live (ZB501KL)

Last Modified : 01 Jan, 1970 05:30 am

உலகின் முதல் Live Streaming Beautification (LSB) தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனை Asus நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. Asus ZenFone Live (ZB501KL) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த போனானது சமூக வலைத்தளங்களில் வீடியோவை லைவ் ஸ்ட்ரீம்ங் செய்யும் போதே BeautyLive app மூலமாக முகத்தின் அழகை மெருகூட்டும் வசதி கொண்டது. ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட ZenUI 3.5, ஹைபிரிட் டூயல் சிம், 5 இன்ச் தொடுதிரை, குவாட் - கோர் ப்ராசெஸ்ஸார், 2 ஜிபி RAM, 16 ஜிபி இன்டெர்ன்ல் ஸ்டோரேஜ், 13 MP பின்பக்க கேமரா, 5 MP முன்பக்க கேமரா, 4G VoLTE மற்றும் 2650mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இந்த மொபைலின் விலை 9,999 ரூபாயாகும்.

Advertisement:
[X] Close