3.65 கோடி ஆண்ட்ராய்டு சாதனங்களை பாதித்த 'ஜூடி'

Last Modified : 01 Jan, 1970 05:30 am

'ஜூடி' எனும் மால்வேர் கூகுள் ப்ளே ஸ்டார் மூலமாக சுமார் 3.65 கோடி ஆண்ட்ராய்டு பயனாளர்களை தாக்கி உள்ளதாக செக் பாயிண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரிய நிறுவனம் ஒன்றால் உருவாக்கப்பட்ட 41 செயலிகளில் இந்த மால்வேர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு சாதனங்களில் நுழையும் ஜூடி மால்வேர் இணையதளங்களில் வரும் விளம்பரங்களை கிளிக் செய்து அவற்றின் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு இணைய வருவாயை ஈட்டி தந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இதுவரை 85 லட்சத்தில் இருந்து 3.65 கோடி வரையிலான ஆண்ட்ராய்டு சாதனங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. செக் பாயிண்ட் அளித்த தகவலின் அடிப்படையில் ஜூடி மால்வேரை கொண்டிருந்த 41 செயலிகளும் கூகுள் ப்ளே ஸ்டாரில் இருந்து நீக்கப்பட்டு விட்டன.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close