ஆட்டம் காணவைக்கும் ஜியோவின் அடுத்த ஆஃபர்!!

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

ரிலையன்ஸ் நிறுவனம் தனது ஜியோவின் மூலம் தொலைத்தொடர்பு மார்க்கெட்டை ஆட்டம் காண வைத்தது. தற்போது ஜியோவுடன் போட்டி போட அனைத்து நிறுவனங்களும் இலவச கால், அதிக டேட்டா என புதிய திட்டங்களை கொண்டு வருகின்றனர். அடுத்ததாக, வெகு நாட்களாக எதிர்பார்த்த ஜியோ ஃபைபர் சேவை வரும் ஜீலை மாதம் வெளியாகிறது. இதில் அதிரடி முதல்கட்ட ஆஃபராக வெறும் 500 ரூபாய்க்கு 100ஜிபி டேட்டாவை ஜியோ வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இணைய வேகம், 100Mbps இருக்கும் என ஜியோ கூறுகிறது. தற்போது பிராட்பேண்ட் சேவையில் ஆதிக்கம் செலுத்தி வரும் பி.எஸ்.என்.எல் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களும் இதைத் தொடர்ந்து அதிரடி ஆஃபர்களை வெளியிடுவார்கள், என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபைபர் சேவைக்கான ரவுட்டர் தொழில்நுட்பத்தையும் குறைந்த விலைக்கு ஜியோ வழங்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close