இந்தியாவுக்கு வந்தாச்சு நோக்கியா 6!!

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பல வருடங்களுக்கு பிறகு நோக்கியா நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே தனது அடுத்த ஸ்மார்ட்போன் வரிசையை வெளியிடுகிறது. நோக்கியா 3, 5, 6 ஆகிய 3 போன்களும் வரும் 13ஆம் தேதி இந்தியாவுக்கு வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக 3310 என்ற திடமான சாதாரண போனை அந்நிறுவனம் வெளியிட்டது. தற்போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 6 மொபைலுடன் 3 மற்றும் 5 ஆகியவையும் சேர்ந்து வாடிக்கையாளர்கள் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வருட தொடக்கத்தில் பார்சிலோனாவில் நடந்த சர்வதேச மொபைல் விற்பனையாளர்கள் சந்திப்பில், நோக்கிய 6 அறிமுகப்படுத்தப்பட்டது. லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தில் வெளியாகும் இதில், 16 மெகாபிக்ஸல் பின் கேமரா, 8 மெகாபிக்ஸல் முன் கேமரா, 3 ஜிபி ரேம், 3000mAh பேட்டரி ஆகிய வசதிகள் உள்ளன. இதன் விலை குறைந்தபட்சம் ரூ.16,000 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close