ஒன் ப்ளஸ் 5 அறிமுகம்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
நம் அன்றாட வாழ்வில் மொபைல் போன் என்பது ஒரு அங்கமாக மாறிவிட்டது. கர்ணனின் கவச குண்டலம் போல நமது கையோடு இருக்கும் ஒரு பொருள். மொபைல் விற்பனையில் என்ன தான் ஐபோன், சாம்சங் முன்னணி வரிசையில் இருந்தாலும் கூட நடுத்தர மக்களின் சாய்ஸ் 'ஒன் ப்ளஸ்'. சற்று குறைந்த விலையில், அதிக அம்சங்களை கொண்டது. சீனாவின் ஒன் ப்ளஸ் நிறுவனம், இந்தியாவில் தன்னுடைய 'ஒன் ப்ளஸ் 5' மொபலை அறிமுகப்படுத்துகிறது. 7.1 நௌகட் ஆண்ட்ராய்டு சாப்ட்வேரில் இயங்கும் இந்த மொபைலில், செல்ஃபி கேமரா 16 பிக்சலுடனும், பேக் கேமரா 23 பிக்சலுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 8 ஜி.பி ரேம், 4000mAh பேட்டரி, 5.5 இன்ச் டிஸ்ப்ளே உள்ளிட்ட வசதிகள் வாடிக்கையாளர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த வெளிச்சத்தில்கூட, துல்லியமாக புகைப்படங்களை இந்த மொபைலில் எடுக்கலாம் என்கிறார்கள் ஒன் ப்ளஸ் ஊழியர்கள். அமேசான் இந்தியாவில் வரும் ஜூன் 22ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close