ஜி.எஸ்.டி.யின் தாக்கம்: 40% விலையை குறைக்கும் நிறுவனங்கள்!!

  shriram   | Last Modified : 08 Jun, 2017 04:46 pm
நாடு முழுவதும் ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரியை (ஜி.எஸ்.டி) வரும் ஜூலை மாதம் முதல் அமல் படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பல மாநிலங்களில் ஜி.எஸ்.டி வரிக்கான சட்டங்கள் நிறைவேறிவிட்டன. இந்நிலையில், திட்டமிட்டபடி ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டால், நஷ்டம் ஏற்படும் என்ற காரணத்தால், தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை எப்படியாவது விற்றுவிட வேண்டும், என பல முன்னணி நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன. இதனால், வரும் நாட்களில் மின்னணு சாதனங்களின் விலை 20 முதல் 40% வரை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இருக்கும் பொருட்களை விற்காமல் புதிய பொருட்களை எடுக்க வேண்டாம் என விநியோகஸ்தகர்கள் முடிவெடுத்துள்ளனராம். இதனால், டிவி, ஏசி, ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் மீது வழக்கமாக கிடைக்கும் தள்ளுபடியை விட இரண்டு, மூன்று மடங்கு அதிகமாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங், ஹிட்டாச்சி, வீடியோகான் போன்ற முன்னணி நிறுவனங்களும் கூடுதல் ஆபர்கள் கொடுக்க முனைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close