ஜிஎஸ்டி-யால் ஆன்லைனில் 80% தள்ளுபடி!

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
அடுத்த மாதம் முதல் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வரவுள்ள நிலையில், பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் தங்களது பொருட்களை விற்றுத் தீர்க்க அதிரடி விலை குறைப்பில் ஈடுபட்டுள்ளன. டிவி, ப்ரிட்ஜ், ஏசி போன்ற மின்னணு சாதனங்களின் விலை 20 முதல் 40% குறைவதாக நேற்று கூறியிருந்தோம். இந்நிலையில், தற்போது இணைய வர்த்தக நிறுவனங்களான ப்ளிப்கார்ட், அமேசான் ஆகியவை 80% வரை விலையை குறைத்துள்ளன. ஆடைகள், வீட்டு அலங்கார பொருட்களின் விலை மீது இரண்டு இணையதளங்களும் போட்டி போட்டு தள்ளுபடி கொடுத்து வருகின்றன. லீ, ரீபோக், அடிடாஸ் போன்ற சர்வதேச நிறுவன பொருட்களும் இதில் அடங்கும். ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்ட பின்னர், ரூ.1000 -த்திற்கு மேல் இருக்கும் துணிமணிகளின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1000 ரூபாக்கு குறைந்த ஆடைகள் மீது 5% வரியும், அதற்கு மேல் உள்ள ஆடைகளின் மீது 12% வரியும் விதிக்கப்படும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close