இந்தியாவுக்கு வந்தது கூகுள் VR

  shriram   | Last Modified : 12 Jun, 2017 04:05 pm
தற்போது பொழுதுபோக்கு உலகின் மிகப்பெரிய மார்க்கெட் VR எனப்படும் விர்ச்சுவல் ரியாலிட்டி தான். ஒரு இடத்திற்குள் நம்மை கொண்டு சென்று நிறுத்திவிடும் சக்தி கொண்டது வி.ஆர் தொழில்நுட்பம். பேஸ்புக்கின் ஆக்குலஸ், எச்.டி.சி வைவ், பிளேஸ்டேஷன் ஆகிய மிகப்பெரும் நிறுவனங்கள் வி.ஆர் தொழில்நுட்பத்தின் மூலம், வீடியோக்களும், கேம்களும் தயாரித்து வருகின்றன. பல மொபைல் போன்களை பிரத்யேக வி.ஆர் பாக்ஸ்-களில் இணைத்தும் இந்த தொழில்நுட்பத்தை கண்டு களிக்கலாம். கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள பிக்சல் ஸ்மார்ட்போனில் வி.ஆர் தொழில்நுட்பத்தை அனுபவிக்க 'கூகுள் டேட்ரீம்' என்ற வி.ஆர் பாக்ஸை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதனுடன், ஒரு வி.ஆர் கண்ட்ரோலரும் வழங்கப்படுகிறது. இந்த இரண்டையும் வைத்து இதுவரை இல்லாத அளவு நுணுக்கமாக வி.ஆரை அனுபவிக்க முடியும் என கூகுள் தெரிவித்துள்ளது. தற்போது இந்த டேட்ரீம் வி.ஆர் இந்திய மார்க்கெட்டுக்கு வந்துள்ளது. இதன் விலை சுமார் 10,000 ரூபாய் என நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் அறிமுக ஆஃபராக ப்ளிப்கார்ட்டில் இதை 6,499 ரூபாய்க்கு வாங்கலாம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close