இந்தியாவில் வெளியானது நோக்கியா 3, 5, 6!!

  shriram   | Last Modified : 13 Jun, 2017 03:44 pm
நோக்கியா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நோக்கியா 3, 5, 6 ஸ்மார்ட்போன்கள் இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. இதில் மிக சிறந்ததாக கருதப்படும் நோக்கியா 6-ன் விலை ரூபாய் 14,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமேசான் இணையதளத்தில் நாளை முதல் நோக்கியா 6-ஐ பெற முன்பதிவு செய்துகொள்ளலாம். இந்த போனில், 3 ஜிபி ரேம், 5.5 இன்ச் Full HD டிஸ்பிளே, மற்றும் 16/8 மெகாபிக்ஸல் கேமராக்கள் உள்ளன. நோக்கியா 3 மற்றும் 5 போன்களை, கடைகளில் மட்டும் தான் பெற முடியும். ஜூன் 16ஆம் தேதி முதல் நோக்கியா 3, விற்பனைக்கு வருகிறது. அதன் விலை ரூ.9,499 என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. நோக்கியா 5 போனை ஜூலை 7 முதல் முன்பதிவு செய்துகொள்ளலாம். அதன் விலை 12,899 ரூபாய் என அறிவித்துள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close