யாஹுவை வாங்கியது வெரிசோன்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
நீண்ட இழுபறிக்கு பின்னர் யாஹூ நிறுவனத்தை வெரிசோன் நிறுவனம் வாங்கி உள்ளது. இரு நிறுவனங்களுக்கும் இடையேயான விற்பனை ஒப்பந்தம் இறுதியாக நேற்று கையெழுத்தானது. இந்திய மதிப்பில் சுமார் 28,956 கோடி ரூபாய்க்கு வெரிசோன் நிறுவனம் யாஹுவை வாங்கி உள்ளது. ஆனால் அலிபாபா நிறுவன பங்குகள் மற்றும் யாஹூ ஜப்பானின் பங்குகள் விற்பனை செய்யப்பட வில்லை. வெரிசோனின் துணை நிறுவனமான AOL உடன் இணைந்து யாஹூ செயல்பட உள்ளது. AOL மற்றும் யாஹூ நிறுவனங்களின் இணைப்பு காரணமாக சுமார் 2,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். கூடுதல் செலவினங்கள் மற்றும் பொறுப்பு பகிர்வு பிரச்சனை போன்றவற்றை சமாளிக்க இந்த முடிவு எடுக்கப் பட்டதாக கூறப்படுகிறது. யாஹூ கைமாறியதை தொடர்ந்து அதன் செயல் அதிகாரி மெரிசா மேயர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இழப்பீடு தொகையாக அவருக்கு சுமார் 804 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close