சம்பளம் வேண்டாம் - அனில் அம்பானி

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 15 Jun, 2017 03:05 pm

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மிகப்பெரிய கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறது. 45,000 கோடி ரூபாய் அளவுக்குக் கடன் உள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ.966 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்திருக்கிறது. இந்தநிலையில், நிறுவனத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல வேண்டிய கட்டாயத்தில் அனில் இருக்கிறார். இதனால், இந்த ஆண்டுச் சம்பளம் அல்லது ஊக்கத்தொகை என எதையும் பெறப் போவது இல்லை என்று தாமாக முன்வந்து அனில் அம்பானி தெரிவித்துள்ளதாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதேபோல், நிறுவனத்தின் மிக முக்கிய நிர்வாகிகளும் 21 நாள் சம்பளத்தை அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். செப்டம்பரில் மேற்கொள்ளப்பட உள்ள இரண்டு முக்கியமான நடவடிக்கைகள் மூலம் கடன் சுமையைப் பாதியாகக் குறைக்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close