அமெரிக்காவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தை சவூதி கைப்பற்றியது

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 21 Jun, 2017 12:39 pm
அமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தைச் சவூதி அரேபியா கைப்பற்றியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் போர்ட் அர்த்தர் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின், 100 சதவிகித பங்குகளையும் சவூதி அரசரின் சவூதிஅராம்கோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதன்மூலம், ஒரு நாளைக்கு 6 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யைக் கையாளும் திறன் கொண்ட வட அமெரிக்காவிலேயே மிகப்பெரிய அந்தச் சுத்திகரிப்பு நிறுவனம் சவூதி வசம் சென்றுள்ளது. இதுவரை சவூதி அராம்கோவுக்கு 50 சதவிகித பங்குகள்தான் இருந்தது. ராயல் டச் ஷெல் நிறுவனம் வெளியேறியதைத் தொடர்ந்து மீதமுள்ள பங்குகளையும் சவூதி அராம்கோ கைப்பற்றியது. ஜார்ஜியா, வடக்கு மற்றும் தெற்கு கரோலினா, வெர்ஜீனியா, மேரிலேண்ட் மற்றும் டெக்சாஸ் மற்றும் ஃபுளோரிடாவின் பெரும்பான்மைப் பகுதியில் உள்ள ஷெல் விற்பனை நிலையங்கள் அனைத்தும் இனி, அராம்கோ வசம் செல்கிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close