இந்திய ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான இன்டெக்ஸ் புதிதாக Intex Aqua S3 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில், 5 இன்ச் தொடுதிரை, ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளம், குவாட் - கோர் ப்ராசெஸ்ஸார், 2ஜிபி RAM, 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 64 ஜிபி எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், 8 MP பின்பக்க கேமரா, 5 MP முன்பக்க கேமரா, டூயல் சிம், 4G VoLTE மற்றும் 2450mAh பேட்டரி போன்ற அம்சங்களும் அடங்கி உள்ளன. மேலும் QR code scanner, miFon security மற்றும் Gaana music app போன்றவையும் இதில் உள்ளன. இந்த மொபைலின் விலை 5,777 ரூபாயாகும்.