செல்லாத ரூபாய் நோட்டுக்களை மாற்ற, வங்கிகளுக்கு அவகாசம்

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 21 Jun, 2017 04:36 pm
இந்தியாவில் கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8 ம் தேதி, 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை, செல்லாது என்று அறிவித்திருந்தார். இதன்படி, வங்கியில் டெபாசிட் ஆன செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கிகள் ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும். ஆனால், சில வங்கிகள் தங்களிடம் இன்னும் பழைய ரூபாய் நோட்டுக்கள் இருப்பதாகத் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கிகளுக்கு மத்திய நிதித்துறை அமைச்சகம், ஒரு மாதம் கால அவகாசம் கொடுத்துள்ளது. இதன்படி வங்கிகள் மற்றும் அஞ்சலகங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 30-க்குள் பெற்ற செல்லாத ரூபாய் நோட்டுக்களையும், கூட்டுறவு வங்கிகள் நவம்பர் 14, 2016 க்குள் பெற்ற செல்லாத ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்யலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close