இந்தியாவில் தயாரித்த 15,600 ஃபோர்ட் கார்களில் கோளாறு

  shriram   | Last Modified : 25 Jun, 2017 02:22 am
தென்னாப்பிரிக்காவில் விற்பனையான சுமார் 15,600 கார்களை ஃபோர்ட் நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இவை அனைத்தும், ஃபோர்ட் பிகோ மற்றும் ஐகான் மாடல் கார்களாகும். தீ விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளதால் அவற்றை திரும்ப பெறுவதாக ஃபோர்ட் தெரிவித்துள்ளது. இந்த கார்கள் அனைத்தும் 2004 முதல் 2012 வரை இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என தெரிய வந்துள்ளது. "வண்டியின் ஸ்டீயரிங்கின் திரவம் லீக்கானால் அதனால் ஏற்படும் வாயு புகை அல்லது தீயை உண்டாக்கும் ஆபத்து உள்ளது," என ஃபோர்ட் தெரிவித்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close