ஆன்லைன் விற்பனையில் நோக்கியா 3

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஜூன் 16ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 3 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன், தற்போது ஆன்லைன் விற்பனைக்கு வந்துள்ளது. ஆன்லைனில், ரூ. 9,499-க்கு நோக்கியா 3 விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, கருப்பு நிற நோக்கியா 3 போன் மட்டுமே களத்தில் இருக்க, மற்ற நிற நோக்கியா 3 போன்கள் அவுட் ஆப் ஸ்டாக்கில் உள்ளன. 5 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே கொண்ட நோக்கியா 3, 16ஜிபி மெமரி கொண்டுள்ளது. 128ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவும் கொண்டவை. ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் மற்றும் 1.3GHz க்வாட்-கோர் மீடியா டெக் எம்டி 6737 எஸ்ஒசி-யால் அமைக்கப்பட்டுள்ளது. முன் மற்றும் பின்புற கேமரா 8 மெகாபிக்ஸல் அடங்கியது. 2650mAh பேட்டரி கொண்டு செயல்படும். இதற்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 5 மொபைல்களும் அவுட் ஆப் ஸ்டாக்கில் இருக்கின்றது. ரூ. 12,899 விலைக் கொண்ட நோக்கியா 5-க்கான, முன்பதிவு ஜூலை 7 முதல் ஆரம்பமாகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close