ஸ்பைஸ்ஜெட்டுக்கு வருகிறது இந்தியாவின் மிகப்பெரிய விமானம்!

  shriram   | Last Modified : 28 Jun, 2017 03:43 am

இந்திய பட்ஜெட் விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், உலகப்புகழ் விமான உற்பத்தி நிறுவனமான போயிங்கிடம் புதிதாக ஒரு பெரிய விமானத்தை பெற ஒப்பந்தம் போட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. போயிங் 737 மேக்ஸ் எனப்படும் அந்த விமானம் அடுத்த ஆண்டு தங்களிடம் வந்துசேரும், என ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் கூறினார். இந்திய விமான நிறுவனங்களிலேயே இதுதான் மிகப்பெரிய விமானம் என்றும் அவர் கூறினார். மொத்தமாக சுமார் 13 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், 205 விமானங்களை பெற போயிங்குடன் ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close