டிக்கெட் ரத்து மூலம் ரூ.1400 கோடி சம்பாதித்த ரயில்வே

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
2016-17 நிதியாண்டில் மட்டும் பயணிகள் தங்கள் முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்ததன் மூலம் இந்திய ரயில்வேக்கு 1400 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. இந்தூரைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் ரயில்வேயில் டிக்கெட் ரத்து தொடர்பாக சில கேள்விகளைக் கேட்டிருந்தார். அதில், இந்தத் தகவல் கிடைத்துள்ளது. கடந்த நிதியாண்டில் இது, ரூ.1123 கோடியாகவும், 2014-15 நிதியாண்டில் இது 900 கோடியாகவும் இருந்தது. இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்ட முன்பதிவு டிக்கெட்டை ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பு ரத்து செய்தால், முதல் வகுப்பு ஏ.சி எனில் ரூ.240ம், ஏ.சி 2 டயர் என்றால் ரூ.200ம், ஏ.சி 3 டயர் என்றால் 180ம், ஸ்லீப்பர் என்றால் ரூ.120ம் வசூலிக்கப்படும். இதுவே. ரயில் புறப்படுவதற்கு 12 முதல் 48 மணி நேரத்தில் ரத்து செய்தால், டிக்கெட் கட்டணத்தில் 25 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படும். பயணிகள் இறுதிப்பட்டியல் தயாராவதற்கு முன்பு அல்லது ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால் 50 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close