டெல்லி: மெக்டொனால்ட்ஸ் ஓட்டல் சண்டையால், 1700 பேர் வேலை இழப்பு

  shriram   | Last Modified : 30 Jun, 2017 04:12 pm

டெல்லி முழுவதும் மெக்டொனால்ட்ஸ் ஓட்டல்களை நடத்தி வந்த கன்னாக்ட் பிளாசா (சி.பி.ஆர்.எல்) அமைப்பில் ஏற்பட்ட சண்டையின் காரணமாக 43 ஓட்டல்கள் மூடப்படுகின்றன. அமெரிக்க மெகா ஓட்டல் நிறுவனம் மெக்டொனால்ட்ஸ் மற்றும் டெல்லியின் விக்ரம் பக்ஷி இணைந்து சி.பி.ஆர்.எல் நிறுவனத்தின் மூலம் 55 மெக்டொனால்ட்ஸ் ஓட்டல்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில் இரு தரப்புக்கும் ஏற்பட்ட நிர்வாக சண்டை நேற்று முற்றியதால், 43 ஓட்டல்களை மூடுவதாக பக்ஷி அறிவித்துள்ளார். இதனால் அந்த ஓட்டல்களில் பணிபுரியும் சுமார் 1700 பணியாளர்கள் வேலை இழக்கிறார்கள்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close