3000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் மைக்ரோசாஃப்ட்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் 3000 பணியாளர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விற்பனை பிரிவில் உள்ள குறிப்பிட்ட சில பணியாளர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவன தரப்பில், "சில பணியாளர்களின் வேலை ஆய்வு செய்யப்பட்டு வருவதையும், அவர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். மற்ற நிறுவனங்களை போல், நாங்களும் எங்கள் தொழில் முறைகளை ஆய்வு செய்து வருகிறோம். மறுபயன்பாடு, அதிக முதலீடு போன்றவற்றிற்கு இது வழி வகுக்கும்,"என தெரிவிக்கப்பட்டுள்ளது. cloud computing துறை மீது சமீப காலமாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது ஈடுபாட்டை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்கு முன்னர் 2015 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் முறையே 7,800 மற்றும் 4,700 பேரை மைக்ரோசாஃப்ட் பணி நீக்கம் செய்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close