ரூ.509க்கு 224 ஜிபி டேட்டா தரும் ஜியோஃபை!

  shriram   | Last Modified : 07 Jul, 2017 05:54 pm
மொபைல் போன் மார்க்கெட்டில் புயலை உருவாக்கிய ஜியோ நிறுவனம், தற்போது தனது ஜயோஃபை 4ஜி கருவியில் அதிரடி ஆஃபர்களை வெளியிட்டுள்ளது. புதிதாக ஜயோஃபை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.1999க்கு ரவுட்டர் கருவியை பெறலாம். அதன்பின் ரூ.99கு ஜியோ ப்ரைம் சேவைகளை பெறவேண்டும். இதற்கு பின் ரீசார்ஜ் செய்ய 3 புதிதாய் ஆஃபர்களை ஜியோ வெளியிட்டுள்ளது. புதிய படிக்கையாளர்கள் ரூ.149க்கு ஜயோஃபை ரீசார்ஜ் செய்தால், மாதத்திற்கு (28 நாட்கள்) 2 ஜிபி விகிதம், 12 மாதங்களுக்கு கிடைக்கும். ரூ.309க்கு ரீசார்ஜ் செய்தால், தினம் 1ஜிபி விகிதம் 6 மாதங்களுக்கு பெறலாம். 509க்கு ரீசார்ஜ் செய்தால், தினம் 2 ஜிபி விகிதம், 4 மாதங்களுக்கு (4 x 28 நாட்கள்) கிடைக்கும். பழைய ஜியோஃபை வாடிக்கையாளர்கள் இதே திட்டத்தில் சேவைகளை 28 நாட்களுக்கு மட்டும் பெறலாம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close