120 மில்லியன் வாடிக்கையாளர்களின் தகவல்களை லீக் செய்த ஜியோ !!

Last Modified : 01 Jan, 1970 05:30 am
மிகக் குறைந்த கட்டணத்தில் டேட்டா வழங்கி மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதிர்ச்சி அடைய வைத்தது. மக்களுக்கு 4ஜி சேவையை வாரி வழங்கியதன் மூலம் நம்மில் பலரையும் மொபைல் டேட்டாவினை ஆன் செய்து வைக்க பழக்கி விட்டது. இண்டர்நெட் பயன்படுத்தாத போதும் மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் ஜியோவுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், 120 மில்லியன் ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாடிக்கையாளரின் பெயர், இ-மெயில் ஐ.டி, மொபைல் எண், ஆதார் எண், சிம் கார்டு ஆக்டிவேட் ஆன தேதி உள்ளிட்ட தகவல்கள் லீக் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, இது குறித்து ஜியோ அளித்துள்ள விளக்கத்தில், தங்களது வாடிக்கையாளர்களின் தகவல் அதிக பாதுகாப்புடன் பராமரிக்கப்படுவதாக, பொய்யான தகவல்கள் வெளியாகியுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close