2000 கோடி ரூபாய் இழப்பீடு கேட்கும் கலாநிதி மாறன்

Last Modified : 12 Jul, 2017 08:32 am
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்குதாரர்களின் ஒருவரான கலாநிதி மாறன், 2015-ஆம் ஆண்டு அந்நிறுவனத்தில் இருந்து விலகினார். ஸ்பைஸ்ஜெட்டில் நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக தனது பங்குகளை அந்நிறுவனத்தை துவங்கிய அஜய் சிங்கிடமே விற்று விட்டு அவர் விலகி கொண்டார். இந்நிலையில், பங்கு பரிமாற்றத்தின் போது அஜயுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக 2016-ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் கலாநிதி மாறன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கானது பின்னர் 3 ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாயத்தின் முன்பு விசாரணைக்கு அனுப்பப்பட்டது. விசாரணை நடைபெற்று வரும் இந்நேரத்தில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திடம் சுமார் 2000 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு கலாநிதிமாறன் முறையீடு செய்துள்ளார். தனக்கு ஏற்பட்ட இழப்பிற்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஒப்பந்தத்தை சரியாக நடைமுறைப் படுத்தாதே காரணம் என மாறன் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவிக்க ஸ்பைஸ்ஜெட் நிறுவன அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close