10,000 புள்ளிகளைத் தொடும் தூரத்தில் நிஃப்டி!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
தேசிய பங்கு சந்தையில் நிஃப்டி தினமும் புதிய உச்சத்தைப் பதிவு செய்துகொண்டே செல்கிறது. இன்றைக்கு, 9,800 புள்ளிகளைத் தாண்டி வர்த்தகமாகிக்கொண்டிருக்கிறது. நிஃப்டி இம்மாத இறுதிக்குள் இது 10 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டும் வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை 9782 என்ற புதிய உச்சத்துடன் சந்தை முடிவடைந்தது. இதுபோன்ற பல்வேறு சாதகமான அம்சங்கள் தென்படுவதால், இம்மாத இறுதிக்குள்ளாகவே, நிஃப்டி 10 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கிறோம் என்று பங்கு வர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 31,800 புள்ளிகளைக் கடந்து வர்த்தகமாகி வருகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close