உணவு பொருட்கள் விற்பனை - அமேசானுக்கு அனுமதி

Last Modified : 12 Jul, 2017 08:27 am
இணையதள விற்பனை நிறுவனமான அமேசான் ஆடைகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் போன்றவற்றை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், உணவு பொருட்கள் மற்றும் மளிகை பொருட்களை விற்பனை செய்ய அமேசானுக்கு இந்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. உணவு பொருள் விற்பனைக்கு மட்டும் சுமார் 3000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய அமேசான் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே Amazon Pantry திட்டம் மூலமாக இந்திய நிறுவனங்களுடன் இணைந்து உணவு பொருட்களை அமேசான் விற்பனை செய்து வருகிறது. இதேபோல் பிக் பசார், ஸ்டார் பசார் மற்றும் ஹைப்பர் சிட்டி ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து மளிகை பொருட்கள் விற்பனையும் மேற்கொண்டு வருகிறது. தற்போது நேரடி விற்பனை முறைக்கு அனுமதி கிடைத்துள்ளதால் மற்ற நிறுவனங்களுடனான தொழில் தொடர்பில் பாதிப்பு ஏற்படலாம் என தெரிகிறது. ஆனால் இது குறித்து கருத்து கூற அமேசான் நிறுவனம் மறுத்து விட்டது. அமேசானுக்கு அனுமதி கிடைத்ததை தொடர்ந்து இந்திய இணைய விற்பனை நிறுவனமான ஃபிளிப்கார்ட்டுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close