பணபரிவர்த்தனைக்கு கட்டணம்; எஸ்.பி.ஐயின் புது அறிவிப்பு

  jvp   | Last Modified : 12 Jul, 2017 08:27 am
எஸ்.பி.ஐ (ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா) வங்கி, அடிக்கடி ஏதாவது அதிரடியான அறிவிப்புகள் விட்டு வாடிக்கையாளர்களைத் திண்டாட வைப்பது வாடிக்கை. அந்த வகையில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது எஸ்.பி.ஐ வங்கியின் ஐ.எம்.பி.எஸ் (IMPS) எனப்படும் உடனடி பணப் பரிவர்த்தனை சேவையில் கட்டண மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இனிமேல் ரூ. 1000க்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்ய ரூ.5ம் ரூ. 1லட்சத்துக்கு மேல் செய்பவர்களுக்கு ரூ.15ம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டியால் இந்த மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்துள்ள வங்கி, இதன்மூலம் அடிப்படை வரிகள் உள்ளிட்ட சில வரிகள் குறைக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close