தொடரும் காளையின் ஆதிக்கம்! 32,000 புள்ளிகள் தாண்டியது சென்செக்ஸ்

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இந்திய பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கம் நாளுக்கு நாள் வலுவடைந்துகொண்டே செல்கிறது. இதைத் தொடர்ந்து இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் முதன்முறையாக 32 ஆயிரம் என்ற அளவைத் தாண்டி சென்றது. இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தை 32,037.38 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில், நிஃப்டி ஒரே நாளில் 75.60 புள்ளிகள் அதிகரித்து 9891.70 என்ற உச்சத்தை அடைந்தது. சந்தை செல்லும் வேகத்தைப் பார்த்தால் அடுத்த வாரத்திலேயே நிஃப்டி 10 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய வர்த்தகத்தில், ஐ.டி.சி, பாரதி ஏர்டெல், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, யெஸ் பேங்க் உள்ளிட்ட பங்குகள் உயர்வாக இருந்தன. இந்தியன் ஆயில், ஓ.என்.ஜி.சி, டாடா மோட்டார்ஸ் நஷ்டத்தைச் சந்தித்தன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close