பங்குச்சந்தை: நிஃப்டி சரித்திர சாதனை

  shriram   | Last Modified : 17 Jul, 2017 07:21 pm
இன்று டெல்லி பங்குச் சந்தையின் நிஃப்டி 50, சரித்திரத்தில் முதன்முறையாக 9900 புள்ளிகளை தாண்டியது. மதியம் 3 மணியளவில் அதிகபட்சமாக 9,928.20 புள்ளிகளை தொட்ட நிஃப்டி, 9,915.95 புள்ளிகளுடன் முடிந்தது. சீனா உட்பட ஆசிய மார்க்கெட்டுகள் கணிசமான முன்னேற்றம் கண்டிருப்பதால், பங்குச்சந்தை ஏற்றம் கண்டுள்ளதாக கருதப்படுகிறது. ஐடி நிறுவனங்களான விப்ரோ மற்றும் இன்போசிஸ் ஏற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 32,074.78 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close