ரூ 999 விலையில் நோக்கியா 105 : நாளை முதல் விற்பனை

Last Modified : 18 Jul, 2017 03:38 pm

எச்.எம்.டி குளோபல் நிறுவனம், நோக்கியா பிராண்ட் உரிமத்தை வைத்துள்ளது. தற்போது நோக்கியா 105 என்ற புதிய மொபைலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.999 ஆகும். இதில் ஒரு சிம் மட்டுமே உபயோகிக்கலாம். இரண்டு சிம் மாடல் மொபைல் ரூ.1,149 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் விற்பனை நாளை துவங்குகிறது. நோக்கியா 105 மொபைல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பழைய நோக்கியா 105 மாடல், 20 கோடி யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. புதிய மாடலில், பெரிய ஸ்கிரீன், அதிக திறனுடைய பேட்டரி, எல்இடி டார்ச் லைட் என மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இரண்டு மாடல்களிலும் 1.8 இன்ச் கலர் டிஸ்பிலே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் நோக்கியா 130 என்ற மாடலையும் விரைவில் வெளியிட உள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close