'இண்டிகோ'வின் அடுத்த இலக்கு என்னன்னு தெரியுமா?

  jvp   | Last Modified : 18 Jul, 2017 06:53 pm

உள்நாட்டு விமான சேவையில் இந்தியாவின் மிகப்பெரியதொரு நிறுவனம் இண்டிகோ. வியாபாரத்தில் அது தனது அடுத்தகட்ட இலக்காகத் தென் மாநிலங்களைக் குறி வைத்துள்ளது. அதற்கான காரணத்தையும் இண்டிகோ தெரிவித்துள்ளது. "இயற்கையாகவே தென் இந்தியா விமான சேவைக்கு ஏற்ற ஒன்று. மேலும் இப்பகுதியில் சேவை அளித்து வந்த ஏர் கோஸ்டா, ஏர் கார்னிவெல், ஏர் பெகாசஸ் ஆகிய 3 நிறுவனங்களும் தங்களது சேவைகளை நிறுத்தி 18 மாதங்கள் ஆகியுள்ளன. இது எங்களுக்கு மிகவும் சாதகமான ஒன்றாகவும் உள்ளது," என தெரிவித்துள்ளது. ஏர்பஸ் விமானத்தை மட்டுமே பயன்படுத்தி வந்த இண்டிகோ சுமார் 50 ஏடிஆர் 72-600 ரக விமானங்களை வாங்கி இருக்கிறதாம். இந்த புதிய சேவையை மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதனால் இதிலே கட்டணங்களும் மிகக் குறைவாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close