சிகரெட் விலை உயர்வால் சரிந்தது சென்செக்ஸ்

  jvp   | Last Modified : 18 Jul, 2017 05:46 pm
நேற்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 32,074.78 புள்ளிகளைப் பெற்று உச்சத்தில் இருந்தது. ஆனால் இன்று, அதிலே 363 புள்ளிகள் இழந்து 31,710.99 புள்ளிகளை அடைந்துள்ளது. இன்றைய சரிவிற்கு சிகரெட் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரிதான் எனக்கூறப்படுகின்றது. அது இந்தியாவின் மிகப்பெரிய சிகரெட் தயாரிப்பு நிறுவனமான ஐடிசி-யை பெரிய அளவில் பாதித்து மொத்த எப்எம்ஜிசி துறையை அதிர வைத்திருக்கிறது என்கின்றனர். மேலும் இன்றைய சரிவிற்கு ஐடிசி நிறுவனத்தின் சரிவு மட்டும் காரணமில்லையாம்; அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மருத்துவ காப்பீட்டு மசோதா அமலாக்கம் செய்வதில் ஏற்பட்ட பிரச்னையும் ஒரு காரணம் எனச் சொல்லப்படுகிறது. இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 363.79 புள்ளிகள் சரிந்து 31,710.99 புள்ளிகளாகவும், தொடர்ந்து வர்த்தக சரிவில் இருக்கும் நிஃப்டி 88.80 புள்ளிகள் சரிந்து 9,827.15 புள்ளிகளாகவும் உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close