வோடபோன் ஐடியா கூட்டணிக்கு மத்திய அரசு ஒப்புதல்

  shriram   | Last Modified : 25 Jul, 2017 01:05 am
இந்திய தொலைத்தொடர்புத் துறையிலேயே மிகப்பெரிய கூட்டணியாக கருதப்படும், வோடபோன் - ஐடியா கூட்டணிக்கு மத்திய வர்த்தக போட்டி ஆணையம் இன்று அனுமதி அளித்துள்ளது. ஒப்புதல் கடிதத்தை வெளியிட்ட ஐடியா நிறுவனம், மற்ற சம்பிரதாயங்கள் முடிந்தபின் அடுத்த ஆண்டு இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என தெரிவித்தது. மொத்தம் 40 கோடி வாடிக்கையாளர்களுடன், இந்த புதிய நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக உருவெடுக்கும். அதன் தலைவராக ஆதித்ய பிர்லா நிறுவனங்களின் தலைவர் குமார் மங்களம் பிர்லா நியமிக்கப்படுவார். அதில், 45.1% பங்குகள் வோடபோன் நிறுவனத்திற்கும், 26% பங்குகள் ஐடியா நிறுவனத்திற்கும், மீதமுள்ளவை பொது பங்குகளாகவும் பிரிக்கப்படும். இணைந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் சுமார் 80,000 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close