அம்பானி ஃபிரீயா போன் கொடுப்பதின் ரகசியம் என்ன?

  shriram   | Last Modified : 25 Jul, 2017 06:59 pm
ஜூலை 21ம் தேதி 4G போன் ஃபிரீன்னு அம்பானி சொன்னாலும் சொன்னார்... 4 நாளா அதை பத்துன ஆராய்ச்சிலேயே எல்லாரும் பொருளாதார வல்லுனர்களா மாறீட்டீங்க. ஒரு பக்கம் இல்லுமினாட்டி, கார்ப்பரேட் அது இதுன்னு சவுண்ட் வந்தாலும், குமுதா ஹாப்பின்னு தான் சொல்ல தோணுது. அந்த போன்-ல என்னெல்லாம் இருக்கு? இந்த போன் ரெண்டு சிம் போடுற basic 4G handset. அதாவது, 'ஸ்மார்ட் போன்-னு' சொல்றோமே.. அந்த ரகம் இல்லை. ஆனா இதுல 4G நெட்ஒர்க் மூலம் ஃபிரீயா கால் பண்ணலாம், SMS அனுப்பலாம் etc. இது போக இன்டர்நெட், SD கார்டு சப்போர்ட், FM ரேடியோன்னு கொசுறு ஐட்டம்களும் இருக்கு. 'ஸ்மார்ட் போன்-னா சேட், வீடியோஸ், பாட்டு எல்லாம் இருக்குமே... இதுலயும் இருக்குன்னா இதுவும் ஸ்மார்ட் போன் தானே?'ன்னு நீங்க சொல்றது கேக்குது... ஆனா.. SJ சூர்யா சொல்ற மாதிரி இதுல 'ஒரு விஷயம் இருக்கு.. ஆனா இல்லை' அதாங்க நீங்க யூஸ் பண்ற வாட்ஸ் ஆப், டெலிக்ராம், ஹைக் ஆப்ஸ்-க்கு பதிலா ஜியோ சேட்-ன்னு அவங்க ஆப் இருக்கு. இதே மாதிரி, வாய்ஸ் கமாண்ட்ஸ் யூஸ் பண்ணி கால் பண்ணலாம், SMS அனுப்பலாம். பாட்டு கேக்கலாம், வீடியோஸ் பாக்கலாம்.. ஆனா ஜியோ ஆப்ஸ் தான் யூஸ் பண்ணியாகனும். இதுல டிவி கூட பாக்கலாம்.. ஆனா அதுக்கு 309 'தனா தன்' ரீசார்ஜ்-ம் போன்-டிவி கேபிளும் அவசியம். என்ன ரேட்? 1500 ரூபாய் டெபாசிட் செஞ்சா போதும், ஹாண்ட்செட் ஃபிரீ. 3 வருஷம் முடிஞ்சு திருப்பி கொடுத்துட்டு நம்ம காசை வாங்கிக்கலாம். எப்போ வாங்கலாம்? ஆகஸ்ட் 24ம் தேதில இருந்து போன்-ஐ முன்பதிவு செய்யலாம். செப்டம்பர்ல இருந்து விநியோகம் ஆரம்பம்ன்னு சொல்லிருக்கார் முகேஷ் அம்பானி. சரி... இப்போ ரகசியத்துக்கு வருவோமா! சுமார் 10 கோடி வாடிக்கையாளர்கள் அடுத்த 2 வருஷத்துல இதன் மூலம் போன் வாங்குனா, அவங்க ஜியோ சேட், ஜியோ வீடியோஸ், ஜியோ மொபைல் வாலட், ஜியோ மியூசிக், ஜியோ டீவின்னு, .. எல்லாம் ஜியோ மயம் தான். அதுல என்னன்னு நினைக்காதீங்க. அதுக்கு அப்புறமா.. உங்க போன் மூலமா பண பரிவர்த்தனை, மொபைல் காமர்ஸ்ன்னு, கிட்ட தட்ட நம்மளை நேர்ந்து விட்ட மாதிரி தான். கணக்கை நாங்க போடலை.. உங்க கற்பனைக்கே விட்டுடுறோம்! எப்படியும் யாரோ இதை செய்யத் தான் போறாங்க... அதை ஒரு இந்தியன் செய்யறதுல என்ன தப்பு? மேலும், இதனால எல்லாத்துக்கும் மொபைல் சேவை கைக்கு எட்டுற தூரத்தில வந்துரும். அதனால வியாபாரம், GDP வளரும்... மொத்தத்துல நாட்டுக்கு நல்லது தான். ஆனா அம்பானிக்கு என்ன கிடைச்சா நமக்கென்ன? நமக்கு இன்னைக்கு இதை விட சூப்பர் ஆஃபர் கெடையாது. வள்ளுவர் சொன்ன விஷயத்தோட இதை முடிச்சுக்கலாம். "பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று" அர்த்தம்: கையில காசு இருந்தா, நெனைச்ச இடத்துக்கு போயி இருட்டு போல இருக்கற துன்பத்தை துரத்திட முடியும். அடித்தட்டு மக்களுக்கு இந்த ஆஃபரும் அப்படித்தான்!

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close