நோட் 4 போனை திரும்பப் பெறுமா ரெட்மி!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 26 Jul, 2017 11:40 am
பெங்களூருவில் புதிதாக வாங்கிய ரெட்மி போன் வெடித்து எரிந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் அந்த மொபைல் சார்ஜரில் இல்லை. இதுவே சார்ஜரில் இருக்கும்போது வெடித்திருந்தால் பாதிப்பு அதிகமாக இருந்திருக்கும். பொதுவாக ரெட்மி 4 மொபைலை சார்ஜ் செய்யும்போது அதிக வெப்பம் ஏற்படுகிறது. இதனால், இப்போது ரெட்மி போனை பயன்படுத்தவே பலரும் யோசிக்கின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரெட்மி நிறுவனம், "வாடிக்கையாளர்கள் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம். என்ன பிரச்னை, எதனால் வெடித்தது என்று வாடிக்கையாளரிடம் கேட்டுள்ளோம். அவருக்குப் புதிய ரெட்மி போன் அனுப்பிவைக்கப்படும் " என்றது. அதன்பிறகு, அந்த வீடியோவின் நம்பகத்தன்மையில் சந்தேகம் உள்ளது. இருப்பினும் இதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது" என்றது ரெட்மி. அமெரிக்காவில் சாம்சங் கேலக்ஸி நோட் 7 போன் தொடர்பான பிரச்னை ஏற்பட்டபோது, அமெரிக்காவில் விற்பனையான அத்தனை நோட் 7 போன்களையும் திரும்பப் பெறுவதாக சாம்சங் அறிவித்தது. அதேபோல், ரெட்மி 4ல் பிரச்னை இருப்பது உறுதியானால் அத்தனை போன்களையும் ரெட்மி திரும்பப் பெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளில் சட்டங்கள் மிகக் கடுமையாக, வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பானதாக இருக்கிறது. இந்தியாவில் அதுபோன்ற கடுமையான சட்டங்கள் இல்லை. எனவே, என்னதான் பிரச்னை இருந்தாலும் போனை திரும்பப் பெற்று, வேறு போனை வழங்க சாத்தியமில்லை என்றே நுகர்வோர் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close