முதல்முறையாக 10,000 புள்ளிகளுக்கு மேல் முடிந்தது நிஃப்டி!

Last Modified : 26 Jul, 2017 06:25 pm

இந்தியப் பங்குச்சந்தை சமீபமாக உயர்வுடன் காணப்படுவதுடன், பங்குச்சந்தை விற்பனையில் பல சாதனைகளையும் நிகழ்த்தி வருகிறது. நேற்று நிப்டி 10,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்தது. ஆனால் சந்தை முடியும் நேரத்தில் 9,964.55 புள்ளிகளாக இருந்தது. இன்று காலை, பங்குச்சந்தை நிப்டி 9,983.65 என்ற புள்ளிகளுடன் தொடங்கி, 10,020.50 என்ற புள்ளிகளுடன் முடிந்தது. அதிகபட்சமாக 10,024.45 ஆக இருந்தது. இதனால் வரலாற்றில் முதல் முறையாக நிப்டி 10,000 புள்ளிகளுடன் வர்த்தகம் முடிந்து சாதனை படைத்துள்ளது. இதே போல் சென்செக்ஸ் 32,226.08 என புள்ளிகளில் தொடங்கி 32,382.46 என்ற புள்ளிகளுடன் முடிந்தது. அதிகபட்சமாக 32,413.63 புள்ளிகளை எட்டியது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close