ஜி.எஸ்.டி-யில் புதிதாக பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியது!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் புதிதாகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே நாடு முழுவதும் ஒரே மாதிரியான சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கும் ஜி.எஸ்.டி சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இதில், ஏற்கனவே வரி செலுத்தும் 86 லட்சம் தொழில் மற்றும் சேவை நிறுவனங்களுடன் புதிதாக 10 லட்சம் நிறுவனங்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ளன. இன்னும் இரண்டு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாக மத்திய வருவாய்த்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இந்த 10 முதல் 12 லட்சம் புதிய பதிவுகளில் இருந்து, 8 - 9 லட்சம் பேர் வரி செலுத்தினால் கூட நாட்டின் வரி வருவாய் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும். சரக்கு மற்றும் சேவை வரி காரணமாக நாட்டின் நேரடி வரி வருவாய் 20 முதல் 25 சதவிகிதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close