மாட்டிறைச்சி ஏற்றுமதியில் மூன்றாவது இடத்தைத் தக்கவைத்த இந்தியா!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இந்தியாவில் பசுக்கள் தெய்வங்களாகப் போற்றப்படுகின்றன. நாட்டின் சில பகுதிகளில், மாட்டிறைச்சி வைத்திருந்ததற்காகவே பல கொலைகள் நடந்திருக்கின்றன. அதேநேரத்தில், டன் கணக்கில் இந்தியாவில் இருந்து மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுவதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்தநிலையில், உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான அமைப்பு இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது என்றும், அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியாவை இந்த இடத்தில் இருந்து யாராலும் அசைக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 15.6 லட்சம் டன் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது உலக 2026ம் ஆண்டில், 19.3 லட்சம் டன்னாக உயரும். இது உலக மாட்டிறைச்சி ஏற்றுமதியில் 16 சதவிகிதம் என்று அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன. தற்போதைய நிலவரப்படி மாட்டிறைச்சி ஏற்றுமதியில் பிரேசில் முதலாவது இடத்திலும், ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close