ஃப்ளிப்கார்ட்டுடன் நோ டீல்! ஸ்நாப்டீல் அறிவிப்பு

  shriram   | Last Modified : 01 Aug, 2017 09:43 am
ஃபிளிப்கார்ட்டுக்கு விற்கும் பேச்சுவார்த்தை முடிவுற்றதாகவும், தொடர்ந்து தனித்து இயங்கப் போவதாகவும் ஸ்நாப்டீல் அறிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஸ்நாப்டீலை, ஆன்லைன் வர்த்தகத்தின் சந்தைத் தலைவனாக இருக்கும் ஃபிளிப்கார்ட் வாங்குதாக இருந்தது. இது தொடர்பாக கடந்த ஏழு மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்துவந்தது. ஸ்நாப்டீல் நிறுவனத்தில் முதலீடு செயதிருந்த ஸ்ஃப்ட் வங்கி உள்ளிட்ட முதலீட்டாளர்கள் வற்புறுத்தல் காரணமாக ஸ்நாப்டீல் விற்பனை தொடர்பான பேச்சுவார்த்தை நடந்துவந்தது. தற்போது இந்த பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும், தொடர்ந்து தனியாக செயல்பட இருப்பதாகவும் ஸ்நாப்டீல் அறிவித்துள்ளது. புதிதாக வேறு வழியில் தங்களது நிறுவனத்தை நடத்தவிருப்பதாக ஸ்நாப்டீல் தரப்பில் தெரிவித்துள்ளது. இந்த முடிவை ஏற்பதாக, ஸ்நாப்டீல் முதலீட்டாளர்களும் தெரிவித்துள்ளனர். ஸ்நாப்டீல் நிறுவனத்தை ஃபிளிப்கார்ட் 5000 முதல் 5500 கோடி ரூபாய்க்கு வாங்க திட்டமிட்டது. ஸ்நாப்டீலோ 6500 கோடி ரூபாய் என்ற அளவில் விற்பனைக்கு தயார் என்றது. இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், பேச்சுவார்த்தை முறிவடைந்துள்ளது. ஸ்நாப்டீலை ஃபிளிப்கார்ட் வாங்கியிருந்தால், ரூ.6400 கோடி அளவுக்கு முதலீடு செய்வதாக ஸாஃப்ட் வங்கி அறிவித்திருந்தது. தற்போது ஸ்நாப்டீல் தொடர்ந்து தனித்து செயல்படப் போவதாக அறிவித்திருப்பது ஸாஃப்ட் வங்கி மற்றும் ஃபிளிப்கார்ட்டுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close