இனி Paytm-மிலும் பேசலாம்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
இந்தியாவின் மிகப் பெரிய மொபைல் வாலட்டாக விளங்கும் Paytm-ஐ உலகம் முழுவதும் சுமார் 22 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் Paytm-ஐ பயன்படுத்துவோரின் எண்ணிக்கையானது கணிசமாக உயர்ந்துள்ளது. வாடிக்கையாளர்களை மேலும் கவரும் விதமாக Paytm மூலமாக மெசேஜ் அனுப்பும் வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இன்னும் இரண்டு வாரத்தில் இந்த சேவையானது பயனாளர்களுக்கு அளிக்கப்படும் என தெரிகிறது. மெசேஜ் சேவை மூலம், Paytm பயனாளர்கள் தங்கள் நண்பர்களுடன் Paytm-ல் இருந்தபடியே பேசலாம். மேலும் பல்வேறு நிறுவனங்கள் தங்களின் பொருட்களை விளம்பரப்படுத்தவும் இந்த சேவை உதவியாக இருக்கும். தகவல் தொடர்பு செயலிகள் பண பரிமாற்ற சேவையை அளித்து வரும் நிலையில் அதற்கு போட்டியாக Paytm நிறுவனம் மெசேஜிங் சேவையை அளிக்க உள்ளது. ஹைக் நிறுவனம் ஏற்கனவே UPI அடிப்படையிலான பண பரிமாற்ற சேவையை அளித்து வருகிறது. வாட்ஸ்ஆப் நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் இதே போன்ற சேவையை தனது செயலியில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close